main
  1.   சென்னை வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன், உருவாக்கப்பட்டது தான் நமக்கு நாமே குடும்ப நல பாதுகாப்பு திட்டம் இத்திட்டம் CVPAவின் தனி ஒரு பிரிவாக தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தை சுருக்கமாக CVPA NNT என்று சொல்லலாம்.
  2.   நமக்கு நாமே குடும்ப நல பாதுகாப்பு (CVPA NNT) திட்டத்தில் ஆயிரம் உறுப்பினர்களை இணைப்பதை இலக்காக நிர்ணயித்து, இத்திட்டத்தை செயல்படுத்தி , அவர்கள் அளிக்கும் பங்களிப்புத் தொகையை பகிர்ந்து அளிப்பதே இத்திட்டத்தின் முதல் நோக்கம் ஆகும்.
  3.   CVPA NNT திட்டத்தின்படி இயற்கை மரணம், விபத்து மரணம் , போன்ற இழப்புகளுக்கு பண உதவி செய்வது, இதில் உறுப்பினர்களாக இணையும் போட்டோ வீடியோ கலைஞர்களின் குடும்பங்களுக்கு இனி வரும் காலங்களில் மருத்துவம், அறுவை சிகிச்சை, கல்வி, ஓய்வூதியம், மற்றும் பல நல திட்ட உதவிகள் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  4.   நமக்கு நாமே குடும்ப நல பாதுகாப்பு திட்டத்தில் முதற்கட்டமாக, CVPA NNT உறுப்பினரின் உயிரிழப்பிற்கு அவரது குடும்ப வாரிசுகளுக்கு பண உதவி உடனடியாக வழங்கப்படும்.
  5.   நமக்கு நாமே குடும்ப நல பாதுகாப்பு திட்டத்தில் உங்களை பங்களிப்பாளராக இணைத்துக் கொள்ள ஒரே தவணையாக ஆயிரம் ரூபாய் முதலில் செலுத்த வேண்டும். இந்த தொகை நலத்திட்ட உதவி தொகையாக, CVPA NNT வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும்.
  6.   இத்திட்டத்திற்கென CVPA NNT என்கிற பெயரில் கனரா வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
  7.   ஒவ்வொரு உறுப்பினரின் உயிரிழப்பிற்கும் CVPA NNT வங்கி கணக்கில் இருந்து 200 ரூபாய் எடுத்து வழங்கப்படும்.
  8.   இத் திட்டத்திற்காக www.cvpannt.com என்கிற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக வேலட் உள்ளது. உங்கள் தகவல்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.
  9.   நமக்கு நாமே குடும்ப நல பாதுகாப்பு திட்டத்தில் பங்களிப்பாளராக இணைய வேண்டும் என்றால் CVPA வில் கண்டிப்பாக உறுப்பினராக இருக்க வேண்டும்.
  10.   CVPA NNT திட்டத்தில் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே சேர முடியும்.
  11.   நமக்கு நாமே குடும்ப நல பாதுகாப்பு திட்டத்தில் பங்களிப்பாளராக சேர்ந்த நாள் முதல் இத்திட்டத்தின் பயன்களைப் பெற நமது சங்க உறுப்பினர்கள் CVPA வில் தொடர்ந்து ரினிவல் செய்வது என்பது கட்டாயமாக்கப்படுகிறது.
  12.   நமக்கு நாமே குடும்ப நல பாதுகாப்பு திட்டத்தில் இணையும் உறுப்பினர் சங்கத்தில் ரெனிவல் செய்யாத பட்சத்தில் CVPA NNT யின் தகுதியை இழந்து விடுவார். அவர் மீண்டும் விருப்பப்பட்டால் CVPA சங்கத்தில் ரினிவல் செய்து இத்திட்டத்தில் சேர்ந்து பலன்களை பெறலாம் அவர் மீண்டும் சேரும் போது ஏற்கனவே அவர் அளித்த பங்களிப்பு தொகை தொடரப்படும்.
  13.   நமக்கு நாமே குடும்ப நல பாதுகாப்பு திட்டத்தில் நமது கலைஞர்களுக்கு ஏற்படும் விபத்து மற்றும் இயற்கை மரணங்களுக்கு அவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை (உச்சவரம்பு) பயனாளர்களுக்கு வழங்கப்படும். ( இது இத்திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு ஏற்ப இந்த தொகை மாறுபடும்).
  14.   இத்திட்டத்தில் இணையும் பங்களிப்பாளர் செலுத்தும் தொகையான ஆயிரம் (1000/-) ரூபாயில் இருநூறு (200/-)ரூபாய் பதிவு கட்டணமாகவும், மீதியுள்ள 800 ரூபாய் பயனாளிகளின் குடும்பங்களுக்கு பயனாளி தொகையாக வரவு வைக்கப்படும். இதன் விபரங்கள் www.cvpannt.com எனும் இணையதளத்தில் பங்களிப்பாளர் Login Page ல் சென்று உங்களுக்கான வேலட்டில் கணக்கு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் வாட்ஸாப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் CVPA NNT கணக்கில் ஜீரோ பேலன்ஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  15.   நமக்கு நாமே குடும்ப நல பாதுகாப்பு திட்டத்தின் படி ஒரு உறுப்பினரின் உயிர் இழப்பிற்கு அவரின் வாரிசுகளுக்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து 200 ரூபாய் பணம் எடுத்து கொடுத்த பிறகு அந்த பங்களிப்பு தொகையான 200 ரூபாயை தாமதம் இன்றி,www.cvpannt.com என்கிற இணையதளத்திற்கு நீங்களே நேரடியாக சென்று பணத்தை செலுத்தி விடலாம்.
  16.   ஒவ்வொரு பயனாளிகளுக்கும் பணம் வழங்கியவுடன் இது தொடர்பான முழு விபரங்கள் அனைத்தும் நமக்கு நாமே குடும்ப நல பாதுகாப்பு திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட www.cvpannt.com இணையதளத்திலும், வாட்ஸ்அப் மூலமாகவும் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
  17.   இத்திட்டத்தின்படி பங்களிப்பாளரின் பணம் பயனாளிகளுக்கு வழங்கி விட்ட பிறகும் கூட உறுப்பினர் ஒருவர் பணம் செலுத்தாமல் ஜீரோ பேலன்ஸ் ஆகும் பட்சத்தில் அவர் பங்களிப்பாளர் மற்றும் பயனாளருக்கான தகுதியை இழந்து விடுவார். மீண்டும் அவர் பங்காளிப்பாளராக தொடர வேண்டும் என்றால் வங்கியில் இருந்து பயனாளர்களுக்கு எடுத்து வழங்கிய பங்களிப்பாளரின் தொகையை முழுவதுமாக செலுத்திய 90 நாட்களுக்கு பிறகு தான் அவர் பயனாளிகளுக்கான தகுதியை பெறுகிறார்.
  18.   ஒரு பங்களிப்பாளர் இத்திட்டத்தில் இணைந்து 90 நாட்களுக்குப் பிறகுதான் உறுப்பினரின் இறப்பின் அடிப்படையில் அவரது வாரிசுகள் பயனாளிகளாக முடியும்.
  19.   பங்களிப்பாளர் மற்றும் பயனாளி இருவரும் இல்லாத பட்சத்தில் அரசு சட்டப்படி வாரிசுதாரராக உரிமை பெறுபவர் பயனாளி தொகையை பெறுவதற்கான தகுதி உடையவர் ஆவார்.
  20.   இது குறித்து மேலும் விபரம் அறிய நமது சங்க செயலாளர் துரைபாபு அவர்களின் அ லைபேசி எண்ணுக்கு ( 92 821 64723) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.