நமக்கு நாமே திட்டம் குறைந்தபட்சம் ஆயிரம் உறுப்பினர்களை இணைத்து, அதை ஒரு இலக்காக கொண்டு செயல்படுத்துவதே இத்திட்டத்தின் முதல் நோக்கமாகும். நமக்கு நாமே திட்டத்தில் ஒருவர் பங்களிப்பாளராக சேர வேண்டும் என்றால், அவர் கண்டிப்பாக CVPA-ல் உறுப்பினராக இருக்க வேண்டும். நமக்கு நாமே திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நமது கலைஞர்களுக்கு ஏற்படும் விபத்து மற்றும் இயற்கை மரணங்களுக்கு, அவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை (உச்சவரம்பு) பயனானர்களுக்கு வழங்கப்படும். (உறுப்பினர் சேர்க்கைக்கு ஏற்ப இந்த தொகை மாறுபடும்). CVPANNTக்கு பங்களிப்பாளர் செலுத்தும் தொகையான ஆயிரம் (1000/-) ரூபாயில் 200 ரூபாய் நுழைவு கட்டணமாகவும், மீகமுள்ள 800 ரூபாய் பயனாளிகளின் குடும்பங்களுக்கு பயனாளி தொகையாக வரவு வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் CVPANNTயில் உங்கள் கணக்கு ஜீரோ பேலன்ஸ் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.(Read More)
பங்களிப்பாளர் பதிவு படிவம்